விருதுநகர் இந்து நாடார் பெருமக்கள் தங்கள் வணிகத் தொழிலை நடத்துவதற்காகச் சென்னை மாநகரில் வந்து குடியேறினர். சென்னை வாழ் வணிகப் பெருமக்களும் விருதுநகர் வணிகர்களைப் போலவே தமக்குள் கட்டுப்பாடுகளை வரையறுத்துக் கொண்டனர். கடுமையாக உழைத்தனர். பெரும் பொருள் ஈட்டினர்.
ஈத்துவக்கும் இனிய வாழ்வே இன்ப வாழ்வு என்பதை நன்கு உணர்ந்தவர்கள் இந்தப் பெருமக்கள். அதனால் விருதுநகர் வணிகர்களைப் போலவே தாம் ஈட்டிய செல்வம் தமக்கு மட்டுமல்ல இந்தச் சமுதாயத்திற்கும் பயன்பட வேண்டும் என்று எண்ணினர். இந்த எண்ணத்தின் வடிவமே சென்னையில்-இந்த வண்ணையில் 1922ல் உதித்த மதராஸிலிருக்கும் விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தி தருமபண்டு என்னும் அறநிலையம். அவ்வறநிலையத்திற்கு மகமை நிதி நல்ல முறையில் வளர்ந்தோங்கியது. அவ்வாறு சேர்ந்த நிதியை சாதி, மத பேதமின்றி எல்லா சமூகத்தவரின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த விரும்பினர்.
தமது பூர்வீக ஊரான விருதுநகரில் உள்ளதைப் போல வண்ணையம்பதியிலும் ஒரு பள்ளியைத் தொடங்க வேண்டும் என திருவாளர். P.M.A. தங்கப்ப நாடார் அவர்கள் தீர்மானித்தார். அதே கருத்துடைய பெரியோர்களைத் தம்முடன் இணைத்து மதராஸிலிருக்கும் விருதுநகர் நாடார்கள் ஆரம்பப் பாட சாலை அபிவிருத்தி தருமபண்டு என்ற பெயரில் ஒரு கல்வி அறக்கட்டளையை 1942இல் நிறுவினார். 1944ல் திருவாளர் P.M.A. தங்கப்ப நாடார் அவர்கள் டிரஸ்டியாகவும் மற்றும் திருவாளர். P.M.A.தெய்வநாயக நாடார், திருவாளர். M.P.சண்முக நாடார், திருவாளர். P.பெரியசாமி நாடார், ஆகியோரின் அயராத முயற்சியுடனும் மதராஸிலிருக்கும் விருதுநகர் நாடார்கள் ஆரம்பப்பாட சாலை என்ற பெயரில் வண்ணையம்பதி, சிங்காரத் தோட்டம் 8வது சந்தில் ஆரம்பப் பள்ளி தொடங்கப்பட்டது. திருவாளர்கள். P.S.கருப்பையா நாடார், K.மாரியப்ப நாடார், P.M.P.திரவிய நாடார், V.A.S.M.A.லட்சுமி நாராயண நாடார், P.M.P.முக்கந்த நாடார், V.நாகரத்தின நாடார், K.S.S.ரத்தினசாமி நாடார், S.S.V.தர்மராஜ் நாடார், தொ.அ.ரத்தினசாமி நாடார், மற்றும் P.A.N. ராஜரத்தின நாடார் ஆகியோர் டிரஸ்டி P.A.M.A.தங்கப்ப நாடார் அவர்கள் தலைமையில் நிர்வாகப் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றினர்.
1960 இல் திருவாளர்.P.A.M.A.தங்கப்ப நாடாரின் மறைவிற்கு பின் திருவாளர். A.T.பாலகிருஷ்ணன் அவர்கள் டிரஸ்டியாகப் பொறுப்பேற்றார். 1965ல் இப்பள்ளி மதராஸ் விருதுநகர் நடார் உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. 18-11-1966ல் கல்வித்தந்தை P.A.K.பழனிசாமி அவர்கள் டிரஸ்டியாகப் பொறுப்பேற்றார். சமுதாய நலனையும் ஒற்றுமையையும் கருதி 1922ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சென்னையிலுள்ள விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தி தருமபண்டு என்னும் அறநிலையத்துடன் 1942இல் தொடங்கப்பட்ட மதராஸிலிருக்கும் விருதுநகர் இந்து நாடார்கள் ஆரம்பப்பாடசாலை அபிவிருத்தி தருமபண்டு 01-04-1969இல் இணைந்தது. இவ்விணைப்பிற்கு அருந்தொண்டாற்றிய கல்விதந்தை திருவாளர் P.A.K.பழனிசாமி அவர்களைக் கௌரவிக்கும் பொருட்டு 23-09-1969 அன்று நடைபெற்ற மகமைப் பொதுக்கூட்டத் தீர்மானத்தின்படி பள்ளியின் பெயரானது P.A.K.பழனிசாமி உயர்நிலைப்பள்ளி என்று மாற்றப்பட்டது. 18-12-1970 அன்று நடைபெற்ற நிர்வாகக்குழு கூட்டத் தீர்மானத்தின்படி திருவாளர் P.A.K.பழனிசாமி நாடார் அவர்கள் ஆயுட்காலப் புரவலராக நியமிக்கப்பட்டார்.
1971 இல் மகமையின் தலைவராக திருவாளர் P.A.K.பழனிசாமி அவர்கள், துணைத்தலைவராக திருவாளர் A.R.நாகராஜன் அவர்கள், செயலாளராக திருவாளர் Aru.சங்கரலிங்கம் B.Sc., அவர்கள், துணைச் செயலாளராக திருவாளர் T.S.T.இராஜா அவர்கள், பொருளாளராக திருவாளர் V.P.M.அமிர்தலிங்கம் ஆகியோர் இருந்த காலத்தில் சென்னையிலுள்ள விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தி தருமபண்டானது இராயபுரம் ரெய்னி மருத்துவமனைக்கு பின்புறம் 1, P.A.N.இராஜரத்தினம் சாலை 4வது சந்தில் அமைந்துள்ள ஒரு விஸ்தாரமான மனையை பள்ளிக்கென வாங்கினார்கள். இம்மனையில் கட்டடங்கள் கட்டப்படடு 1974 ஜூன் முதல் பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது. உயர்திரு. V.S.ஆறுமுக நாடார் அவர்கள் தனது ஓரே சொத்தான, எண்.63, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சென்னை-81இல் அமைந்துள்ள V.S.ஆறுமுக நாடார் - சிவகாமி அம்மாள் நிலையத்தை பள்ளிக்கு 23-10-1981இல் நன்கொடையாக வழங்கினார்.
1984ம் ஆண்டு இப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வந்த நிர்வாகப் பெருமக்களால் எழில்மிகு கட்டடங்கள் கட்டப்பட்டு இன்று இப்பள்ளி கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. பள்ளியை காண்போர் இது சோலையா? இல்லை கல்வி சாலையா? என்று வியக்கும் வண்ணம் கலைமகள், திருமகள் நல்லாசியுடன் பொது மக்களின் மேலான ஆதரவுடன் பீடுநடை போட்டு வருகிறது P.A.K.பழனிசாமி மேல்நிலைப் பள்ளி. "உலகில் யாவரும் ஒளியுடன்வாழ உடல் நலம் அறிவு உண்மை வேண்டும்." என்ற இதய வேட்கையை இலட்சியமாக் கொண்டு இயங்கி வரும் இப்பள்ளியை மென்மேலும் சிறந்தோங்கச் செய்ய தருமபண்டைச் சேர்ந்த பெரியோர்கள் தொடர்ந்து பெருமுயற்சி செய்து வருகின்றனர்.
P.A.K.Palanisamy Higher Sec. School boasts a modern and well-designed infrastructure that supports a conducive learning environment. The school campus features spacious and well-lit classrooms, equipped with modern teaching aids and technology to enhance the learning experience.
The laboratories are well-equipped with the latest apparatus and tools, allowing students to engage in hands-on scientific experiments. The school library is a treasure trove of knowledge, stocked with a vast collection of books, reference materials, and digital resources.
Loading